tamilnadu

img

அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அநீதி

திருவாரூர் காவல்துறைக்கு சிபிஎம் கடும் கண்டனம்

திருவாரூர், நவ.28- திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தங்களின் உரிமைக ளுக்காக போராடக் கூடிய அனைத்து பகுதி மக்களின் மீதும் ஜனநாயக விரோ தமாக காவல்துறை வழக்குகளை பதிவு செய்து வருகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் நாட்டிற்கு அர்ப்பணித்த 70 ஆம் ஆண்டு தினத்தை பெருமை யோடு நாம் கடைப்பிடித்து வருகின் றோம். அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஜனநாயக கோட்பாடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நாட்டின் பிரதமர் பெருமை பொங்க பேசி யுள்ளார். 

தொடர் அநீதி 

 இத்தகைய சூழலில் திருவாரூர் மாவட்ட காவல்துறை, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி இருக் கக் கூடிய அடிப்படை உரிமைகளுக்கு எதிராக சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தற்போது மாவட்டத்தின் காவல் கண்காணிப்பா ளராக துரை என்பவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து இந்த அநீதி தொடர்கிறது.  மிகவும் பின் தங்கிய இந்த மாவட்டத்தில் சாதாரண ஏழை- எளிய நடுத்தர மக்கள், சிறு குறு விவசாயிகள், சிறு வணிகர்கள், விவசாயத் தொழிலா ளர்கள், சாலையோர வியபாரிகள் என வாழ்க்கையின் அடித்தட்டில் வாழக் கூடிய மக்களே அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு நாளும் இவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் ஏராளம்.  மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளின் விளைவாக வாழ்க்கையில் பல துன்பங்களை சந்திக்கும் அதே வேளையில் சமூக விரோதிகளின் மூலமாகவும் பல  அச்சு றுத்தல்களை இம்மக்கள் சந்திக்கின்ற னர். இந்த வேளையில் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி இருக்கக் கூடிய அடிப்படை உரிமைகளின் கீழ் தங்களின் வாழ்வாதாரத்திற்காக அற வழியில் போராடுவதற்கு ஆட்சியாளர்களால் தள்ளப்படுகின்ற னர். அப்படி போராடும் மக்கள் மீது தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் துறை வழக்குகளை பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அலைய விடுகிறது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு திட்டத்தின் மூலமாக வரக் கூடிய ஆபத்துக்களை உணர்ந்து திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி மத்திய மாநில அரசுகளுக்கு இம்மாவட்ட மக்கள் தொடர்ந்து பல கோரிக்கைகளை வைத்து வருகின்ற னர். அறவழியில் போராட்டங்களை நடத்துகின்றனர்.  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லமாக டெல்டா மாவட்டங்களை அறி விக்க வலியுறுத்தி மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் சார்பு அமைப்புகளும் தெரு முனைப் பிரச்சாரம் மூலமாக விழிப்பு ணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அடிப்படை உரிமை யான பேச்சுரிமை, பிரச்சார உரி மைக்கு எதிராக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. 

அறவழியில் போராட்டம் 

அண்மையில் மாநிலம் முழுவதும் சமய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களை வகைப்படுத்தி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. இதற்கா கவும் கட்சியின் தலைவர்களான வி.மாரி முத்து, ஐ.வி.நாகராஜன், ஜி.சுந்தர மூர்த்தி மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வசிப்பிட உரிமைக்கு எதிரானதாகும். அதே போன்று அண்மையில் திருவாரூர் மக்களின் கோரிக்கையான புதிய பேருந்து நிலை யத்திற்கு செல்லும் அனைத்து பேருந்து களும் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என வலி யுறுத்தி திருவாரூர் வர்த்தக சங்கத்தி னர் அறவழியில் போராட்டம் நடத்தினர். அவர்களில் நூற்றுக்கும் மேற்பட் டோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

சட்ட விரோத  நடவடிக்கையில் காவலர்கள் 

குடிமனைப் பட்டா கேட்டு மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த மக்கள் விரோத, ஜன நாயக விரோத நடவடிக்கை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் துறையினரின் அடாவடித்தனத்தை காட்டுகிறது. இந்த நடவடிக்கையை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு வன்மையாக கண்டிக் கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான சுதந்திர போராட்ட வீரர் தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் உட்பட நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து தேடுதல் என்ற பெயரில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லாயிரக்கணக்கானோரைத் திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தி யது. காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பிரச்ச னையை மேலும் தீவிரப்படுத்தாமல் மேல் நடவடிக்கை எதற்கும் செல்லாமல் கட்சி பெருந்தன்மையாக நடந்து கொண்டது. அண்மையில் கூட மாணவர் சங்க நிர்வாகி சந்தோஷ் என்பவரை நகர காவல்துறையினர் கடுமையாக தாக்கிய பிரச்சனை, தற்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் புகாராக உள்ளது. இப்படி தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மீதும், பிற அமைப்பி னர் மீதும் வன்மத்துடன் வழக்குகளை பதிவு செய்வது போன்ற அராஜக நடவடிக்கைகளில் தொடந்து ஈடுபட்டு வருகிறது.

வழக்குகளை  உடனே திரும்ப பெறுக 

சமூக விரோதச் செயல்களை ஒடுக்குவதிலும், பெண்களுக்கு எதி ரான வன்முறை, சட்ட விரோதமாக போதைப் பொருள் விற்பனை போன்ற பல்வேறு சமூக விரோதச் செயல்களின் மீது மாவட்ட காவல்துறை கவனம் செலுத்துவதில்லை. உரிய நடவடிக்கையும் எடுப்பதில்லை. மக்க ளுக்காக போராடக் கூடியவர்களை சமூக விரோதிகள் போல அணுகுவது முறையற்ற செயலாகும்.  எனவே உடனடியாக மாவட்டம் முழுவதும் கட்சியினர் மீதும், பிற அமைப்பினர் மீதும் அறவழிப் போராட்டத்திற்காக போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் காவல் துறை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் கட்சியின் மாநிலத் தலைமையை கலந்து பேசி அனைத்து கட்சிகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் சேவை அமைப்பு களை ஒருங்கிணைத்து திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு எதிராக மிகப்பெரிய தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தனது அறிக்கையில் ஜி.சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.