நாகை மாவட்டம் பொறையார் அருகே திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடி மெயின் ரோட்டில் இயங்கி வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம் கடந்த பல மாதங்களாக பூட்டியே கிடப்பதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து வங்கி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.