தூத்துக்குடி மாவட்டத்தில் மே 9-12 வரை 144 தடை அமல்
தூத்துக்குடி, மே 8 -பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற உள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு மே 9 மாலை 6 மணிமுதல் 12-ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம்முழுமைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் மே 10, 11 தேதிகளில் நடைபெற உள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம்-ஒழுங்கினை பராமரித்திடவும், மே 9 அன்று மாலை 6 மணி முதல் மே 12 காலை 6 மணி வரை தூத்துக்குடிமாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் பிறமாவட்டங்களிலிருந்தும் வந்து விழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு போன்றஅபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும்வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகைவாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்துகொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
‘குற்றாலம் மலைப்பகுதியில் தடுப்பணை’
திருநெல்வேலி, மே 8-குற்றாலத்தில் திருக்குற்றால நாதர் திருக்கோவில் வாடகைதாரர்கள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் சங்கத்தின் 17-வது ஆண்டு துவக்க விழா மற்றும் வணிகர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு குற்றாலம் வணிகர் சங்க தலைவர் காவையா தலைமை வகித்தார். குற்றாலத்தில் மெயின் அருவிக்கு மேலே சிறுசிறு தடுப்பணைகள் கட்டி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயனளிக்கும் வகையில் தண்ணீரை சேமிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றாலம் மெயின் அருவி பகுதியில் பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை பழுது நீக்கம் செய்து உடனடியாக செயல்பட செய்ய வேண்டும். குற்றாலம் சன்னதி பஜாரில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும். குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான கடைகளை 1.7.2016 முதல் பழைய வாடகையிலிருந்து 70 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட வாடகையை கோவில் நிர்வாகம் குறைக்க வேண்டும். திருக்குற்றாலநாதர் கோவில் அலுவலகத்தில் கடைகளுக்கு வாடகை பணம் கட்டினால் அதற்குரிய ரசீதுகளை உடனே வழங்காமல் 2 மாதத்திற்கு மேலாக வியாபாரிகளை தொடர்ந்து அலைகழிக்கின்றனர். எனவே கோவில் நிர்வாகம் இதில் தலையிட்டு பணம் கட்டியதற்கான ரசீதைஉடனடியாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குற்றால அருவிகளுக்கு மேல் தடுப்பணை கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கனவு.
குமரி மாணவர் தற்கொலை
, மே 8 -குமரி மாவட்டம், தக்கலை அருகே புதூர் ஆலுவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின் வினோ. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வெர்ஜின் (16). தக்கலையை அருகே பரைக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு வெர்ஜின் எஸ்.எஸ்.எல்.சி. படித்து தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.இதை தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார். இந்த தேர்வுக்கான முடிவு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த முறையும் அவர் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவருக்கு தாயார் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.இந்நிலையில் வெர்ஜின், அப்பகுதியில் உள்ள நண்பனை பார்த்து விட்டு வருவதாக தாயாரிடம் கூறிவிட்டுசென்றார். ஆனால், வெகுநேரம் ஆகியும் அவர் வீடுதிரும்பாததால் சந்தேகமடைந்த தாயார், அப்பகுதியில் உள்ள நண்பர்களின் வீடுகளில் தேடினார். இதற்கிடையே வாளோடு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் வெர்ஜின் ரயில்முன்பாய்ந்து தற்கொலை செய்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.