tamilnadu

img

பெரம்பலூரில் சமத்துவ பொங்கல் விழா

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ ஸ்டாண்டில் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சிஐடியு மாநில செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். முன்னதாக ஆட்டோ சங்க மாநிலக்குழு சி.சண்முகம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செந்தில்குமார், சிவராஜ் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு என்.செல்லதுரை ஆட்டோ ஊழியர் சங்க நிர்வாகிகள் ஹவுஸ்ஷெரீப், சித்திக்ஷரீப், மல்லீஸ்குமார், அ.செல்லதுரை, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.கே.சரவணன், கிளை செயலாளர் தர்மராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதே போல் மாதர் சங்கத்தினர், ஆலத்தூர் ஒன்றியம் புதுக்குறிச்சி கிராமத்தில் சமத்துவ பொங்கல் வைத்தனர். சங்க நிர்வாகி எ.கலையரசி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.