திருவாரூர், ஜூன் 26- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி காவல் எல்லைக்குட்பட்ட கொத்த மங்கலம் பகுதியில் வசித்து வருபவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜெ.ராபர்ட் பிரைஸ் (39). இவரது தந்தை சி.டி.ஜோசப் கட்சியின் நீடாமங்கலம் நகரச் செயலாளராக இருந்து வருகிறார். இவர்கள் குடும்பத்தின் மீது முன்விரோத பகை காரணமாக தொடர்ந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டு வரும் இதே பகுதியில் வசிக்கும் சின்னப்பன் மகன் வினோத் (30), சிபிஎம் உறுப்பினர் ராபர்ட் பிரைஸ் மீது கடந்த புதன்கிழமையன்று (ஜூன் 17) கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள் ளார். தொடர் புகாருக்கு ஆளாகி வரும் வினோத் காவல்துறையின் மெத்தனம் காரணமாக வெளியில் சுற்றித் திரிகிறார். நீடாமங்கலம் பேரூராட்சி கொத்த மங்கலம் பிள்ளையார் கோவில் தெரு முக்கிய சாலையில் இரண்டு குடும்பத்தின ரும் அருகருகே வசித்து வருகின்றனர். ராபர்ட் பிரைஸ் குடியிருந்து வரும் வீடு, இடம் போன்றவை தனக்கு சொந்தமானது எனக் கூறி வினோத் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறார். நள்ளிரவு நேரத்தில் குடி போதையில் வந்து வீட்டின் கதவைத் தட்டு வது, காமக்குரோத வார்த்தைகளால் பேசுவது, வீட்டில் உள்ள பெண்கள், குழந்தை களை அச்சுறுத்துவது என தொடர்ந்து ஈடு பட்டு வந்துள்ளார். ஏற்கனவே சிபிஎம் நகரச் செயலாளர் ஜோசப்பையும் தாக்க முற்பட்டுள் ளார். இதனால் பல புகார்கள் வினோத் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் உள்ளது. இவரால் பாதிக்கப்பட்ட வேறு சிலர் அளித்த புகார்களும் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. காவல்துறையின் இந்த மெத்த னப் போக்கால் திருமணம் ஆகாத இளைஞ னான வினோத்தின் அத்துமீறல் நடவடிக்கை கள் அதிகரித்து வருகிறது.
சி.பி.ஜோசப் மற்றும் அவரது மகன் ராபர்ட்பிரைஸ் ஆகியோர் வசித்து வரும் இடம் குறித்த வினோத்தின் குற்றச்சாட்டின் பேரில் பலமுறை நில அளவையர்களை வைத்து நிலம் அளவீடு செய்யப்பட்டு எல்லை களை வரையறுத்து கல் பதிக்கப்பட்டுள் ளது. வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் உண்மை நிலையை உணர்த்திய பிறகும் வினோத் தொடர்ந்து ராபர்ட் பிரைஸ் குடும்பத்தினர் மீது வன்மத்து டன் நடந்து வந்துள்ளார். ஒரு ரௌடியை போல நடந்து கொள்ளும் வினோத் அளவீடு செய்து நடப்பட்டுள்ள கல்லையும் பிடுங்கி வீசியுள்ளார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி தனது வயலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த ராபர்ட் பிரைஸ் தனது வீட்டு அருகே உள்ள வேகத்தடை யில் வாகனத்தை செலுத்திய போது அங்கு மறைந்திருந்த வினோத் திடீரென்று தாக்கு தல் நடத்தி ராபர்ட் பிரைஸை நிலைகுலைய வைத்துள்ளார். இதனால் ராபர்ட் பிரைஸ் அதே இடத்தில் நிலைதடுமாறி விழ அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு வினோத் உருட்டுக்கட்டையால் தலையி லும், உடலிலும் கடுமையாக தாக்கி யுள்ளார். இருசக்கர வாகனத்தையும் உடைத்துள்ளார்.
மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணத்திலும், இடது கை புருவத்திலும் குத்தி கிழித்துள்ளார். மேலும் ராபர்ட் பிரைஸை “அலக்கு அரிவாளை” எடுத்துக் கொண்டு கொலை வெறியோடு விரட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் தெரு வாசிகள் கலக்கம் அடைய குமார் மற்றும் பரிசுத்தம் ஆகியோர் ராபர்ட் பிரைஸை காப்பாற்றியுள்ளனர். குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் ராபர்ட் பிரைஸை அழைத்துக் கொண்டு நீடாமங்கலம் காவல்நிலையம் சென்று விட்டார். உயிர் தப்பி வந்த ராபர்ட் பிரைஸ், காவல் ஆய்வாளர் சுப்ரியாவை சந்தித்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட வந்த ராபர்ட் பிரைஸை பார்த்த ஆய்வாளர் உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள், நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது அறிவுரையை ஏற்று நீடாமங்கலம் அரசு மருத்துவமனை யில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் ராபர்ட் பிரைஸ். மருத்துவ மனையில் இருந்து அளித்த தகவலின் பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ராஜேந்திரன் ஆய்வாளரின் உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராபர்ட் பிரைஸிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டார்.
அதன் பிறகு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பேரிடர் கால காரணம் காட்டி காவல்துறை வினோத் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் மெத்தனமாக இருந்து விட்டது. இந்நிலையில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.எஸ்.கலிய பெருமாள், ஒன்றியச் செயலாளர் சோம. ராஜமாணிக்கம் ஆகியோர் காவல் ஆய்வா ளர் சுப்ரியாவை தொடர்ந்து வலியுறுத்தியதின் பேரில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) இ.பி.கோ 524, 506-2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையின் நகலை (எஃப்.ஐ.ஆர்) பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளனர். ராபர்ட் பிரைஸின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை இல்லை என்றும் ஜூன் 17 ஆம் தேதி நடந்த சம்பவத்தை 18 ஆம் தேதியன்று குறிப்பிட்டு புகாரை பதிவு செய்திருப்பதா கவும், மேலும் ஒருவார காலம் தாமதமாக வழக்கு பதிவு செய்து ஜூன் 18 ஆம் தேதி யன்று முன் தேதியிட்டு வழங்கி இருப்பதா கவும் சிபிஎம் தலைவர்கள் காவல்துறை மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
கண் இமைக்கும் நேரத்தில் ராபர்ட் பிரைஸ் உயிர் பிழைத்திருப்பதால் வினோத் மீது இ.பி.கோ 307 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். நிலைமை மேலும் விபரீதமாக மாறாத வகை யில் காவல்துறை தனது தவறினை திருத்திக் கொண்டு முறையான நடவடிக்கை எடுப்ப தற்கும், முதல் தகவல் அறிக்கையை நடந்த சம்பவத்தின் அடிப்படையில் பதிவு செய்ய வும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் தலைவர்கள் கோரியுள்ளனர்.