திருச்சிராப்பள்ளி: தொழிலாளர் இணை ஆணையர் உத்தரவையும், கோட்டாட்சியர் டிஎன்சிஎஸ்சி மண்டல மேலாளர் அமைதி பேச்சுவார்த்தையை அப்பட்டமாக மீறும் திருச்சி குட்ஷெட் டிஎன்டபுள்யுசி காண்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே குட்ஷெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலியை குறைத்து கொடுப்பதை கேட்டதால் ரவுடிகளை வைத்து சிஐடியு நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும். தொழிலாளர்களை பிளவுப்படுத்தும் முதலாளிகளை கண்டித்தும் திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில் வியாழனன்று குட்ஷெட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் சந்திரன், சாலை போக்குவரத்து சங்க செயலாளர் வீரமுத்து, துப்புரவுத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மணிமாறன், வழக்கறிஞர் ரெங்கராஜன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, கிளைத்தலைவர் சேகர் ஆகியோர் பேசினர்.