tamilnadu

img

கல்லூரி விளையாட்டு விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 65-ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல்ஹசன் தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றினார். அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெயமோகன் போட்டியை தொடங்கி வைத்தார்.  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் எம்.ஆர்.ரகுநாதன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.