பொன்னமராவதி, ஜூன் 9- காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மண்ணை நேசிப்போம் மக்களை காப்போம் எனும் முழக்கத்தோடு பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பொன்னுச்சாமி சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.குமார், வி.ஆர்.எம்.சாத்தையா, பி.சிங்காரம், என்.பிச்சையம்மாள், எம்.மாயழகு, எம்.நாவலர், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.தீன், சிஐடியு மணிமாறன், பாஸ்கர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல் அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்ப்ன், மீத்தேன் திட்டத்தினால் ஏற்படும் பாதகங்களை விளக்கி சனிக்கிழமையன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா தலைமை வகிதார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜியாவுதீன் உள்ளிட்டோர் பேசினர்.