tamilnadu

img

பிஷப் ஜான்சன் பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான தடகளப் போட்டி

தரங்கம்பாடி, ஜன.22- தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை யின் கீழ் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையிலான மாநில அள விலான தடகளப் போட்டியில் தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி மாண வர்கள் அதிகப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.  சென்னை நேரு விளையாட்டரங்கில், ஜன.14 அன்று மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கரையூர், பாண்டூர், சென்னை, தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தசுலுதி நிறு வன பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட தட களப் போட்டிகளில் தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி (தசுலுதி) மாண வர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். பேராயர் டேனியல் ஜெயராஜ், ஆலோ சனை சங்க செயலர் மெகர் ஆண்டனி, கல்விக் கழக தலைவர் வில்பிரட் ஆகி யோர் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டிய நிலையில், திங்களன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சி யில், தாளாளர் இன்பராஜ், ஆயர் சாம்சன் மோசஸ், தலைமையாசிரியர் ஜான்சைமன் ஆகியோர் மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் வினோத் குமார் ஆகியோரை பாராட்டி கவுரவித்தனர்.