tamilnadu

img

காந்திஜி 150வது பிறந்த நாள் விழா மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு

திருச்சிராப்பள்ளி, அக்.2- மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக மக் கள் ஒற்றுமை மேடையின் திருச்சி மாந கர் மாவட்டக்குழு சார்பில் புதனன்று திருச்சி தெப்பகுளம் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. பின்னர் மக்களை பிளவுபடுத்தும் மதவெறி பாசிச சக்திகளை தனிமைப் படுத்துவோம். இந்திய தேசத்தின் பன்முகத் தன்மையை பாதுகாப்போம். மதநல்லிணக்கம் வளர்த்து மக்கள் ஒற்றுமை காப்போம் என உறுதி மொழி யேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை திருச்சி மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சுப்ர மணியன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சம்பத், வெற்றிச்செல்வன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வரி, மாவட்டத் தலைவர் ரேணுகா, வங்கி சங்க அசோக், சந்தானம், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்க ராமச்சந்திரன், செல்வராஜ், எல்ஐசி சங்க ஜோன்ஸ், ஓய்வூதியர் சங்க சிராஜூதீன், டிஎன்எஸ்எப் மனோகர், டிஎன்ஜிஇஏ லெட்சுமணன், பிஎஸ் என்எல்இயு அஸ்லம்பாஷா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், சிறுபான்மை மக்கள் நலக்குழு ரபீக், தமுஎகச ரங்கராஜன், இளங்குமரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.  மாணவர் சங்க சட்டக்கல்லூரி கிளை சார்பில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய் யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்ட துணைத்தலைவர் நாகாஅர்ஜூன், மாவட்ட துணைச் செயலாளர் கியூபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி
.நாகப்பட்டினம் மாவட்டம் செம்ப னார்கோவிலில் கலைமகள் கல்வி நிறுவனம் சார்பில் காந்தியடிகளின் 150வது பிறந்த தினம் புதனன்று நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் என்.எஸ் குடியரசு தலைமையில் நடைபெற்றது. கலைமகள் மெட்ரிக் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில், காந்தியின் உரு வப்படத்திற்கு முதல்வர்கள், ஆசிரி யர்கள், அலுவலக ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செய்தனர். காந்தி ஜெயந்தியையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது
தஞ்சாவூர்
தஞ்சாவூர் வடக்கு வீதி செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி அருகில் உள்ள காந்தி சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீல மேகம் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், கே.அருளரசன், மாவட்டக்குழு உறுப்பினர் சரவணன், மாநகரச் செய லாளர் என்.குருசாமி, மாநகரக்குழு அப்துல் நசீர், வடிவேலன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பி.சத்தியநாதன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை 
 பட்டுக்கோட்டையில் காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு, தமுஎகச சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. எஸ்.கே.பாலகிருஷ்ணன் காந்தி சிலைக்கும், து.சுரேஷ் காம ராஜர் சிலைக்கும் மாலை அணிவித்த னர். தமுஎகச தலைவர் முருக.சர வணன், செயலாளர் மோரீஸ் அண்ணா துரை, பொருளாளர் பக்கிரிசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, தமுஎகச நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மதவெறிக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி
பூதலூர் வடக்கு ஒன்றியம் திருக் காட்டுப்பள்ளியில் பாலர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அமைப்பாளர் பி. பரணி தலைமையில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பி.எம்.இளங்கோவன் முன் னிலை வகித்தார். மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கலைச்செல்வி, தமுஎகச கிளைத் தலைவர் எம்.ஆர்.ராஜேந்தி ரன், பி.தாமரைச்செல்வன் (ஓய்வூதி யர்), பி.சிவசாமி (விதொச) மற்றும் இந்திய மாணவர் சங்கம், தமுஎகச, சிபிஎம் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.