tamilnadu

img

மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி

மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் மெர்ஸிடிஸ் பென்ஸ் வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார்.

பார்முலா ஒன் கார் பந்தய போட்டியில் உலகின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவன வீரர் லீவிஸ் ஹாமில்டன் தன்னுடன் கடைசி வரை போட்டியிட்ட ரெட் புல் நிறுவன வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பனை நடந்த மொனாகோ கார் பந்தயத்தில் வெற்றி கொண்டார். மொத்தம் 19 சுற்றுகள் நடைபெற்ற போட்டியில் இரண்டாவதாக பெராரி நிறுவனத்தின் செபஸ்டியன் வெட்டல் மற்றும் மூன்றாவது இடத்தில் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மற்றொரு வீரரான வால்டரி போட்டாஸ் ஆகியோர் கைப்பற்றினர்.

மேலும், பரிசளிப்பு விழாவில் லீவிஸ் ஹாமில்டன் இந்த வெற்றியை கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்த முன்னாள் பார்முலா ஒன் வீரர் நிக்கி லவ்டாவிற்கு அளிப்பதாக அவர் கூறினார். ஏற்கனவே லீவிஸ் ஹாமில்டன் கடந்த 2008 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.