tamilnadu

img

லீக் சுற்று நிறைவு

புரோ கபடி 

குறுகிய காலத்தில் பிரபலமடைந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள புரோ கபடி லீக்  தொடரின் 7-வது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் ஆட்ட ங்கள் வெள்ளியன்று நிறைவு பெற்றது.  மொத்தம் 12 அணிகள் பங்குபெற்ற இந்த தொடரில் பெங்கால், தில்லி, ஹரியானா, உ.பி. மும்பை, பெங்களூரு ஆகிய 6 அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதிகம் எதிர்பார்த்த தமிழ்நாடு, பாட்னா, குஜராத் அணிகள் தடுப்பாட்டத்தில் சொதப்பி வெளியேறியது. நட்சத்திர வீரர்கள் இருந்தும் ஜெய்ப்பூர், தெலுங்கு டைட்டன்ஸ் அணி வீரர்கள் பொறுப்புடன் செயல்படாததால் தொடரிலிருந்து வெளியேறியது.   சனி, ஞாயிறு 2 தினங்கள் விடுமுறை நாளா கும். திங்களன்று நாக் அவுட் (எலிமினேட்டர்) சுற்றுகள் தொடங்குகின்றன. எலிமினேட்டர், அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.