சாமுண்டேஸ்வர்நாத் வழங்கினார்
கடந்த மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவிற்குத் தங்கப்பதக்கம் வென்ற நாள் முதல் இன்று வரை வாழ்த்து என்னும் மழையுடன், பரிசு என்னும் கனமழை அடிக்கடி பொழிகிறது. தெலுங்கானா, ஆந்திர அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பி.வி.சிந்துவிற்குப் பரிசுகளை வாரி இறைத்து வரும் நிலையில், இந்தியன் பேட்மிண்டன் லீக் உரிமையாளரும், மும்பை மாஸ்டர்ஸின் இணை உரிமையாளருமான வி. சாமுண்டேஸ்வர்நாத் சிந்துவின் வெற்றியைப் பாராட்டி பிஎம்டபுள்யூ (எக்ஸ்-5) ஆடம்பரக் காரை பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை முன்னிலைப்படுத்தி பரிசாக அளித்துள்ளார்.விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு சாமுண்டேஸ்வர்நாத் தொடர்ந்து வழங்கும் 22வது கார் இதுவாகும்.
ஜெர்மனி தயாரிப்பான இந்த பிஎம்டபுள்யூ எக்ஸ்-5வின் விலை 73 லட்சம் ஆகும். இந்தியாவில் ஆடம்பர கார்களில் முதலிடத்தில் உள்ளது.