tamilnadu

img

உலக மாற்றுத்திறன் குழந்தைகள் தின விழா

குடவாசல்: திருவாரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பாக குடவாசல் வட்டார வள மையத்தில் உலக மாற்றுத்திறன் குழந்தைகள் தினத்தையொட்டி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி கள், சிறப்பு பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலக மாற்றுத்திறன் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமையன்று குடவாசல் வட்டார வள மையத்தில் வட்டார வள மைய (பெ) மேற்பார்வையாளர் கு.இரகுபதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் மாற்றுத்திறன் குழந்தைகள் 70 பேர்  கலந்து கொண்டனர். முன்னதாக காலையில் நடைபெற்ற  ஓட்டப் பந்தயம், தவளை ஓட்டம், ரொட்டி கவ்வுதல், பலுன் உடைத்தல் என பல்வேறு விளையாட்டி போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் வட்டார கல்வி அலுவலர் க.இளங் கோவன், குடவாசல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினார்கள். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மணிகண்டன், மதி, ரேவதி மற்றும் சிறப்பாசிரியர்கள் வைரவே லன், ஏஞ்சளா தேவி,ஜெயந்தி, திலகவேணி இயன்முறை மருத்துவர் ராஜா ஆகியவர்கள் மாணவர்களுக்கு எளிய முறையில் பயிற்சி முறைகளை விளக்கினர். நிறைவாக ஆசிரியர் பயிற்றுநர் வைர வேலன் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை குடவாசல் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கு.இரகுபதி செய்திருந்தார்.