tamilnadu

img

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடனை தள்ளுபடி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

குடவாசல், ஜூன் 3- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நீடாமங்கலம் டவுன் மற்றும்  மண்டபத் தெரு ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை- எளிய மக்கள் கடன் வாங்கியுள்ள மைக்ரோ  பைனான்ஸ் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன்  வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.சுமதி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் பாப்பம்மாள், கிளை செயலாளர்கள் நூருதுமேரி, ஜெய்சிராணி, தமிழரசி, ஜானகி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.