tamilnadu

கொரோனா தொற்று பாதிப்பால் அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் மரணம்

மன்னார்குடி, ஆக.5- அரசு ஊழியர் சங்கத்தின் பட்டுக்கோட்டை முன்னாள் வட்டக் கிளை தலைவர்களில் ஒருவரும்  அனைத்துறை ஓய்வூ தியர் சங்க தஞ்சாவூர் மாவட்ட இணைச் செயலாளரும் பேரா வூரணி வருவாய் வட்டாட்சியராக 2008 வரை பணிபுரிந்து ஓய்வு  பெற்றவருமான ஆர்.தமிழ்செல்வன் கொரோனா தொற்றி ற்கு ஆளாகி மரணமடைந்தார். அவருக்கு வயது 70. கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் காய்ச்சல், சளி, இரு மலைத் தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே முத்து ப்பேட்டையிலிருந்து தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர் அவர் உடல் நிலை மேலும்  மோசமடையவே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு மர ணமடைந்தார். அவரது உடல் செவ்வாயன்று மாலை அவரது சொந்த  ஊரான முத்துப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டு நேரிடையாக  முத்துப்பேட்டை இடுகாட்டில் முறையான பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. அனைத்துறை ஓய்வூதியர் சங்க த்தின் முத்துப்பேட்டை தலைவர் கோவி. ரெங்கசாமி, செயலா ளர் சி.செல்லதுரை, பொருளாளர் அண்ணாதுரை அவரது உடல் அடக்க நிகழ்ச்சியின்போது இருந்தனர். மறைந்த ஆர்.தமிழ்செல்வனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.