tamilnadu

img

கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்திற்கு விலக்கு அளித்திடுக! முத்துப்பேட்டையில் கையெழுத்து இயக்கம்

மன்னார்குடி, ஜூன் 28- கொரோனா முடக்கத் தால் வேலை இல்லை, வாழ்வாதாரம் இல்லை, வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை, வாழ்க்கை நடத்த முடியவில்லை. இந்நி லையில் வீட்டிலேயே அடை ந்து கிடக்க வேண்டி இருப்ப தால், மின்சாரப் பயன்பாடு அதிகமாகி உள்ளது.  இதனால் வழக்கமான மின்சார கட்டணத்துக்கு மிக அதிகமான தொகையை கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தக் கூடுதல் மின் கட்ட ணத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் செலுத்திய தொகையை கொரோனா காலத்தின் மின் கட்டணமாக செலுத்துவதற்கு வகை செய்ய வேண்டும் எனக் கோரி மக்கள் சந்திப்பு மற்றும்  கையெழுத்து இயக்கம் முத்துப்பேட்டை நகரில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை நகர குழுவின் சார்பாக துவங்கிய கையெழுத்து இயக்கத்திற்கு நகர பொறுப்பாளர் சி.செல்ல துரை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் கை யெழுத்து இயக்கத்தை முத்துப்பேட்டை தர்மர் கோ யில் தெருவில்  துவக்கி வைத்தார். மாவட்ட செய ற்குழு உறுப்பினர் கே.தமி ழ்மணி கையெழுத்து இயக்க த்தை முடித்து வைத்து உரையாற்றினார்.