tamilnadu

சமுதாய வளைகாப்பு விழா

 திருவாரூர், அக்.1- திருவாரூர் வட்டம் தண்டலை ஊராட்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சி யர் ஆனந்த் 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் (பொறுப்பு) ராஜம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, மாவட்ட சமூக நல அலுவலர்(பொறுப்பு) உமையாள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர்கள் தமிழ்செல்வி, வேதநாயகி, புவனேஷ்வரி, கண்காணிப்பா ளர் ராமலிங்கம், வட்டாட்சியர் நக்கீரன் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.