திருத்துறைப்பூண்டி, பிப்.12- திருத்துறைப்பூண்டி மேல கொற்கையில் அமை ந்துள்ள சாய் ஸ்ரீனிவாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் எழுத்தாளரு மான ஐ.வி.நாகராஜன் எழு திய “கிராமங்களை நோக்கி “ என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் புத்தக வாசி ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாயன்று பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விரு ந்தினர்களாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவரும், வழக்கறிஞரு மான அரசு.தாயுமானவன், வாசிப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்ட னர். பள்ளி மாணவர்களுக்கு நூலகத்தின் பயன்கள், நூல்களின் மகிமை குறித்து விளக்கப்பட்டது. இளம் வழக்கறிஞர் இன்குலாப், அறிவியல் இயக்க பொறுப்பாளர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி தாளா ளர் கிருஷ்ண குமரன் நன்றி கூறினார்.