tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியில் புதிதாக 20 பேர் இணைந்தனர்

குடவாசல், செப்.29- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் செம்மங்குடி கீழத்தெருவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி எஸ்.சண்முகம் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி முன்னிலை வகித்தார். கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து கட்சியில் புதிதாக இணைந்த 20 பேருக்கு பாராட்டுகளை தெரிவித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஆர்.மணியன் ஆகியோர் புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசினார்கள். நிறைவாக செம்மங்குடி கிளைச் செயலாளர் பி.வீரமணி நன்றி கூறினார்.