tamilnadu

img

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, ஜன.6- திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சி யர் க.சு.கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 லட்சத்து 79 ஆயிரத்து 699 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 11 ஆயிரத்து 747 பெண் வாக்காளர்கள், 90 இதர பாலினத்தவர் என மொத்தம் 19 லட்சத்து 91 ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில், 2020 ஜனவரி 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியரு மான க.சு.கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.