திருவண்ணாமலை, அக்.21- திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் 125 ஏக்கரில் அருணாசலம் சர்க்கரை ஆலை, கடந்த 2001ஆம் ஆண்டில் தொடங் கப்பட்டது. இந்தியாவில் உள்ள சர்க் கரை ஆலைகளில் அதிநவீன வசதி கொண்ட அருணாச லம் சர்க்கரை ஆலையில் 18 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இயந்தி ரங்கள் அனைத்தும் தானி யங்கி வசதிகளை கொண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலைக்கு திருவண்ணா மலை, கலசப்பாக்கம், கீழ் பென்னாத்தூர், வெறையூர், பவித்திரம் போன்ற 40 கிரா மங்களிலிருந்து கரும்பு களை விவசாயிகள் அர வைக்கு அனுப்பி வைத்த னர். ஆலை தொடங்கி ஓராண்டில் அரவை நிறுத்தப் பட்டது, கரும்பு அனுப்பிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 6 கோடி ரூபாய் கரும்பு நிலுவைத் தொகை வழங்கப்பட வில்லை. நிதி நெருக்கடி காரண மாக கடந்த 2013 ஆலை மூடப்பட்டது. அன்று முதல் கரும்பு விவசாயிகள் நிலுவை பணம் வேண்டி போராடி வரு கிறார்கள். இந்த ஆலை தொடங்கப்பட்ட போது மத்திய அரசு சார்பு நிறு வனமான மரபு சாரா எரிசக்தி துறை சார்பில் 65 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு இதுவரை வட்டி,அசல் ஏதும் செலுத்தாததால் மரபு சாரா எரிசக்தி துறையானது டெல்லியில் உள்ள கடன் வசூல் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடந்து ஆலை யின் சொத்துக்களை 40 கோடியே 92 லட்சத்திற்கு பொது ஏலத்திற்கு கடந்த 2018 ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டுவந்தது. அப்போது கரும்பு விவ சாயிகள் நிலுவைத்தொகை வேண்டி எதிர்ப்பு தெரிவித்த தால் பொது ஏலம் நிறுத்தப் பட்டது. அதை தொடர்ந்து, திங்க ளன்று(அக்.21) 35 கோடி ரூபாய்க்கு ஏலம் விட அறி விப்பு செய்யப்பட்டு இருந் தது. இந்த தகவலை அறிந்த கரும்பு விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஆர்பாட்டம் செய்ய முடிவு செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்பதால் ஆர்பாட்டத்தை கைவிட்டு ஏலம் நடத்த வந்த அதிகாரி களிடம் கரும்பு நிலுவை பணத்தை வழங்க வேண்டி மனு கொடுத்தனர். விவசாயிகளின் எதிர்ப் பால் ஏலம் கோர யாரும் வரா ததால் இன்று பொது ஏலம் நடைபெற வில்லை. இது வரை 5 முறை பொது ஏலம் அறிவித்தும், கரும்பு விவ சாயிகளின் எதிர்ப்பு காரண மாக, ஏலம் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.