திருவண்ணாமலை, ஜூலை 18- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் பெரண மல்லூர் பேரூராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, பெரிய பள்ளம் இருந்ததால், பொது மக்கள் அவதிப்பட்டனர். அந்த பள்ளத்தை சீரமைக்கா மல், முறையாக வடிகால் வசதி அமைக்காமல், சாலை அமைக்கப் பட்டதால், மழைக் காலங்களில் 2 அடி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வரும் விவசாயிகளும், பொது மக்களும் அவதிப்பட்டனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெடுஞ்சாலைத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையில் நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப் பட்டது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமை நெடுஞ்சாலைத் துறை யினர் பள்ளத்தையும், சாலையை யும் சீரமைக்கும் பணியை துவங்கியுள்ளனர்.