tamilnadu

img

ஜவ்வாது மலையில் 22வது கோடை விழா

திருவண்ணாமலை, ஜூன் 15-   திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம், ஜமுனா மரத்தூரில் 22 ஆவது ஜவ்வாதுமலை கோடை விழா 2019,   (சனிக்கிழமை) துவங்கியது. தொழில்துறை அமைச்சர் எம்.சி. ம்பத், செய்தி மற்றும் விளம்பரத் துறை  அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் விழாவை தொடக்கி வைத்து அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசினர்.  இந்த விழாவில், மலைவாழ் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் க.சு கந்தசாமி, “கல்வராயன் மலை கிரா மங்களுக்கு சாலை வசதி திட்டம் அமைக்கப்படுகிறது. மிளகு உற்பத்தி ஜவ்வாது மலைப்பகுதியில் அதி கரித்துள்ளது. 2.4 கோடி மதிப்பில் 68 கிராமங்களில் ஜவ்வாது மலைப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.  ஜவ்வாது மலை பகுதிகளில் எஸ்டி மாணவர்களுக்கு மட்டும்,, தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், அடுத்த கொடை விழாவிற் குள் ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையம் அமைக்கப்படும்” என்றார்.