tamilnadu

img

திருவள்ளூர்: 89.49 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி

திருவள்ளூர், ஏப். 19- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் வெள்ளியன்று (ஏப். 19) வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் (திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி, ஆவடி, அம்பத்தூர் ஆகிய ஐந்து கல்வி மாவட்டங் கள் உட்பட) மொத்தமுள்ள 345 பள்ளிகளில் 19,695 மாணவர்களும், 22,371 மாணவிகளும் ஆக மொத்தம் 42,066 தேர்வர்கள் தேர்வெழுதினார்கள். இதில் 16,926 மாணவர்களும், 20,717 மாணவிகளும் ஆக மொத்தம் 37,643 மாணவர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர். திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மாணவர்கள் 85.94 சதவீதம் தேர்ச்சியும், மாணவிகள் 92.61 சதவீதம் தேர்ச்சியும் ஆக மொத்தம் 89.49 சதவீதம் தேர்ச்சி பெற் றுள்ளனர். வருவாய் மாவட்ட அளவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.32 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு 87.17 சதவீதம் ஆகும். வருவாய் மாவட்ட அளவில் 2 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தமாக 58 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மேலும் பூவிருந்தவல்லி பார்வையற்றோர்க்கான சிறப்பு பள்ளியில் 28 மாணவர்கள் தேர்வு எழுதி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராஜேந்திரன், முதன் மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.