tamilnadu

img

விபத்தில் பலியானவரின் உடல் உறுப்புக்கள் தானம்

திருவள்ளூர், ஜன. 7- கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள  மேல்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்த  பி.அருண் பாண்டியன் (வயது 27)  எம்.பி.ஏ பட்டப் படிப்பை முடித்து விட்டு திருப்பதியில் எல்.எல்.பி படித்து  வந்தார். மேலும் ஊரக உள்ளாட்சித்  தேர்தலில் வார்டு உறுப்பினராக போட்டி யிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். ஜன-2 அன்று தேர்தல் முடிவுகள் வெளிந்  தன. தேர்தலில் கிராம வார்டு உறுப்பினர் பத விக்கு போட்டியிட்டதால் அதன் முடிவுகளை தெரிந்துகொள்ள இரவு முழுவதும் விழித்துக்  கொண்டிருந்தார். வெற்றி பெற்ற செய்தி  வந்ததும் மகிழ்ச்சியடைந்த அருண்பாண்டி யன், ஜன.3 அன்று காலை எல்.எல்.பி  தேர்வு எழுத இரண்டு சக்கர வாக னத்தில் திருப்பதிக்கு சென்றுள்ளார்.  அப்போது ஆந்திர மாநிலம் தடா  அருகில் செல்லும் போது திடீரென  ஏற்பட்ட விபத்தில் பலத்த காய மடைந்தார்.பின்னர் சென்னை  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.  ஜன.5 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலியான அருண்பாண்டியனின் இதயம்,  கிட்னி, எலும்பு, தோல் உட்பட பல உறுப்புகள்  குடும்பத்தினர் ஒப்புதலின் பேரில் தானமாக  வழங்கப்பட்டது.