திருவள்ளூர், மே 13- அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி மீஞ்சூர் அருகே உள்ள கவுண்டர் பாளையத்தில் ஞாயிறன்று (மே 12) பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. ‘கற்பி சமூகக் கல்வி பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பின் சார்பில் அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அம்பேத்கர் மன்றம்,சமூக ஆர்வளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும், தனியார்பள்ளிகளின் கட்டண கொள்ளையை எதிர்த்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் சுப்பாரெட்டி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்குகழிவறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும், கவுண்டர் பாளையத்தில்உள்ள தொடக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துகொடுக்க வேண்டும் எனவும்வலியுறுத்தினர்.இந்நிகழ்ச்சிக்கு கற்பி சமுக கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் எம்.தேவேந்திரன், தமுஎகச மாவட்ட துணைத் தலைவர் மோசஸ்பிரபு, வாலிபர் சங்கத்தின்மீஞ்சூர் பகுதிச் செயலாளர் ஜெய்கணேஷ், பொருளாளர் ஜானகிராமன், துணைத் தலைவர் சுபா, கிளைச் செயலாளர் சிவா, வி.சி.க நிர்வாகி விநாயகமூர்த்தி, ஓவியர்சுப.முனிவேல், ஊராட்சி மன்றம் முன்னாள் தலைவர்கள் மனோகரன், கலைவாணன், சுதாகர் மற்றும் மகளிர் குழுவின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.