திருவள்ளூர், மார்ச் 17- மீஞ்சூர் அருகே வெங்கட்டரெட்டி பாளை யத்தில் பராமரிப்பு இல்லாததால் கழிவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட 9-வது வார்டு, வெங்கட்டரெட்டி பாளையம் பகுதி யில் 13ஆண்டுகளுக்கு முன்பு கழிவறையை ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.கழிவறைக்கு தேவையான தண்ணீர் வசதி களுடன் கட்டப்பட்டது என்றாலும் முறையான பராமரிப்பு எதுவும் இல்லாததால் புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்து சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கழிவறையில் அமைக்கப்பட்ட கதவு, ஜன்னல்களை சமூக விரோதிகள் சிலர் உடைத்துள்ளனர்.தற்போது யாரும் பயன்ப டுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பெண்கள் வெட்ட வெளியில் மலம் கழிக்கும் அவலம் தொடர்கிறது. தொடக்கப்பள்ளி வளாகத்தில் இந்த கழிவறை இருப்பதால் குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படு கிறது என்கிறார்கள். மேலும் சுகாதார சீர்கேடு களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக கூறுகின்றனர். இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மீஞ்சூர் பகுதி பொருளாளர் எஸ். ஜானகிராமன் கூறும் போது, மகளிர், குழந்தை களுக்கு என கட்டப்பட்ட கழிவறை திறப்பு விழா காணும் முன்பே கழிவறையின் சுவர்கள் வெடிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரி வித்தும் எந்த பராமரிப்பு பணியும் மேற் கொள்ளவில்லை. இந்த கழிவறையை யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், பாழடைந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கழிவறையை கட்ட வேண்டும் என்றார்.