tamilnadu

img

பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் முதலிடம்!

சென்னை, ஏப். 19-தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவிகிதத் தேர்ச்சி யுடன் முதலிடம் பிடித்துள்ளது.கடந்த மார்ச் 1 முதல் 19 வரைதமிழகம், புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக் கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் 7,082 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள் வெள்ளி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.3 சதவிகித மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.57 சதவிகிதமும், மாணவிகள் 93.64 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 95.37 சதவிகிதம் பேர் தேர்ச்சி யடைந்துள்ளனர். 95.23 சதவிகி தத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடத்தையும், 95.15 சதவிகி தத்துடன் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.கோவையில் 95.1ரூ, நாமக்கல்லில் 94.97ரூ, கன்னியா குமரியில் 94.81ரூ, விருதுநகரில் 94.44ரூ நெல்லையில் 94.41ரூ, தூத்துக்குடியில் 94.23 ரூ, கரூரில் 94.07ரூ, சிவகங்கையில் 93.81ரூ, மதுரையில் 93.64ரூ, உதகமண்டலத்தில் 90.87ரூ, திண்டுக் கல்லில் 90.79ரூ, சேலத்தில் 90.64ரூ, புதுக்கோட்டையில் 90.01ரூ, காஞ்சிபுரத்தில் 89.90ரூ, அரியலூரில் 89.68ரூ, தருமபுரியில் 89.62ரூ, திரு வள்ளூரில் 89.49ரூ, கடலூரில் 88.45ரூ, திருவண்ணாமலையில் 88.03ரூ, நாகப்பட்டினத்தில் 87.45ரூ, கிருஷ்ணகிரியில் 86.79ரூ, திருச்சியில் 93.56ரூ, சென்னையில் 92.96ரூ, தேனியில் 92.54ரூ, இராமநாதபுரத்தில் 92.30ரூ, தஞ்சா வூரில் 91.05ரூ, புதுச்சேரியில் 91.22ரூ மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இது தவிர பாடவாரியாகத் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


இயற்பியலில் 93.89 சதவிகிதம், வேதியியலில் 94.88 சதவிகிதம், உயிரியியலில் 96.05 சதவிகிதம், கணிதத்தில் 96.25 சதவிகிதம், தாவரவியலில் 89.98 சதவிகிதம், விலங்கியலில் 89.44 சதவிகிதம், கணினி அறிவியலில் 95.27 சதவிகிதம், வணிகவியலில் 91.23 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.



100 சதவிகிதத் தேர்ச்சியை 1,281 பள்ளிகள் பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் 84.76 சதவிகிதத் தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.64 சதவிகிதத்தேர்ச்சியும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 98.26 சதவிகிதத் தேர்ச்சி யும் பெற்றுள்ளன. அறிவியல் பாடப் பிரிவுகளில் 92.75 சதவிகிதம்,வணிகவியலில் 90.78 சதவிகிதம், கலைப்பிரிவுகளில் 80.13 சதவிகிதம்,தொழிற்பாடப் பிரிவுகளில் 82.,70 சதவிகிதம் தேர்வு பேற்றுள்ளனர். சிறையில் இருந்து தேர்வு எழுதிய 45 கைதிகளில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,697 மாற்றுத்திற னாளிகள் தேர்வு எழுதியதில், 2,404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற ஏப்ரல் 22 முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 29ஆம் தேதியும் வெளியாகவுள்ளதாக தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம்.