அவிநாசி, மே. 6 -
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 37 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு அவிநாசியில் பல்வேறு பகுதிகளில் புதனன்று கொடிகள் ஏற்றப்பட்டது.
அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட உதவி கோட்டப் பொறியாளர் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் சங்கத்தின் நிர்வாகிகள் ராமன், கருப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.