tamilnadu

img

சிஐடியு பொன் விழா அமைப்பு தினம்

தரங்கம்பாடி, மே 31- இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 50 ஆண்டு பொன்விழா அமைப்பு தினத்தையொட்டி மயி லாடுதுறையில் சிறப்பு கருத்தரங்கு கூட்டம் அமைப்பின் மாவட்ட பொருளாளர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஜாக் அமைப்பின் பொதுச்செயலாளர் டி.ராயர், அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வ.பழனிவேலு உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக சங்கத்தின் கொடியை டி.ராயர் ஏற்றி வைத்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்கத்தின் சார்பில் கார், வேன் ஓட்டுநர்கள் சங்கம், சிறு விற்பனையாளர் சங்கங்களை சேர்ந்த 110 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பழனிவேலு, பொருளாளர் பால சுப்ரமணியன் ஆகியோர் வழங்கினர். சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.ரவீந்திரன் மற்றும் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். நிறைவாக சிறு விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைக் கண்ணு நன்றி கூறினார்.