tamilnadu

img

ரூ.3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அவிநாசி, மே 23-அவிநாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வியாழனன்று பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகஅரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வதில், அவிநாசி பேரூராட்சி நிர்வாகம்முனைப்புக்காட்டி வருகிறது. அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே, ‘சங்கர் பிளாஸ்டிக்ஸ்’ என்ற கடைக்குசொந்தமான குடோனில், பேரூராட்சிதுப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி, மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியம் தலைமையிலான ஊழியர்கள் புதனன்று சோதனை செய்தனர். அங்கு குடோன் முழுக்க, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, தட்டு, டம்ளர் உட்பட பொருட்கள், மூட்டை, மூட்டையாக இருப்பில் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கைப்பற்றி இரண்டு வாகனங்களில் எடுத்துச்சென்றனர். 3 டன் எடை கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மொத்த வியாபாரம் செய்து வரும், ராஜஸ்தானைச் சேர்ந்த சங்கர் குமாருக்கு, பேரூராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்து, அவரது குடோனுக்கு சீல் வைத்தனர்.