tamilnadu

img

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திடுக ஜல்லிப்பட்டியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஆக. 8- அரசு மருந்துவமனையை தரம் உயர்த்தக் கோரி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜல்லி பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் புதனன்று கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. உடுமலை அருகே உள்ள ஜல் லிபட்டியில் கடந்த அறுபது ஆண் டுகளுக்கு மேலாக அரசு மருத்து வமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருந்துவமனையை அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் மற் றும் அருகில் உள்ள மலைவாழ் மக்கள் என ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். சாதாரண கிராமப்புற மக்கள் பயன்பெறும் அரசு மருந்துவமனையை பரி சோதனை கூடம் மற்றும் கூடுதல் படுக்கை அறைகள் கொண்ட மருத் துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் எனப் பல முறை கோரிக்கை விடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை.  இந்நிலையில், ஜல்லிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத் தியும், தொழிலாளர் நல சட்டங் களை திருத்தும் மத்திய அரசைக் கண்டித்தும்  நடைபெற்ற  இந்த   ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ரங்கராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், ஒன்றியக்குழு உறுப் பினர் எஸ்.ஜெகதீசன் மற்றும் கிளை செயலாளர் மணிவாசகம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.