திருப்பூர், ஆக. 3 – நில அளவை உள்ளிட்ட வருவாய்ப் பணிகளுக்கு அநியாயமாக உயர்த்தப்பட் டுள்ள கட்டணங்களை ரத்து செய்ய வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது.
வருவாய்த்துறைப் பணிகளான நில அளவை மற்றும் நில அளவை மேல் முறை யீடு, உட்பிரிவு செய்தல் மற்றும் வரைபடங் கள் வழங்குவதற்கான கட்டணங்களை அப ரிதமாக உயர்த்தி உத்தரவை வெளியிட்டுள் ளது. குறிப்பாக நிலத்தின் ஒருபக்க புல எல் லைகளை சுட்டிக்காட்டும் கட்டணம் ரூ.20 லிருந்து ரூ.200 ஆகவும் (பத்து மடங்கு), நில அளவரின் முடிவுகளுக்கு எதிரான மேல் முறையீட்டுக்கு ஒரு பக்க கட்டணத்தை ரூ.50 இருந்து ரூ.400 ஆக (8 மடங்கு) உயர்த் தப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பணி களுக்கான கட்டணங்களும் 30 முதல் 60 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தை பயன்படுத்தி இக் கட்டண உயர்வுகளை மக்கள் தலையில் சுமத்துவது ஏற்கக் கூடியது அல்ல. ஏற்க னவே சிரமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மேலும் சுமையை தரக்கூடியது. எனவே, தற்போது வருவாய்த்துறை கூடுதல் தலை மைச் செயலாளர் வெளியிட்டுள்ள கட்டண உயர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த கோரிக்கைளை வலியுறுத்தி திங்க ளன்று ஊத்துக்குளி, அவிநாசி மற்றும் திருப்பூர் தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ். வெங்கடாசலம், துணைத் தலைவர் செ.முத்துக்கண்ணன் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.