உடுமலை, ஜூன் 14- உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2 நூலகர் வாசகர் வட்டம், உடுமலை பார தியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் உடுமலை பிரியா பாராமெடிக்கல் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மற் றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்ப டுத்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு பாரதியார் நூற் றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சிவக் குமார் தலைமை வகித்தார். நூலகர் கணேசன், நூலகவாசகர் வட்டப் பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை உழ வர் சந்தையில் காய்கறி வாங்க வந்த பொதுமக்களுக்கும், உழவர்களுக்கும், காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் ஆனந்த கிருஷ் ணன், சண்முக சுந்தரம் ஆகிய காவலர் கள் மற்றும் பொதுமக்களுக்கு கரசுர குடிநீர் வழங்கினர். இதைத்தொடர்ந்து, உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவ லகத்தில் மோட்டார் வாகன ஆய்வா ளர் செல்வதீபா, வாகனங்கள் பதிவு செய்ய வந்தவர்கள் மற்றும் பொது மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கி தனி மனித இடைவெளி கடைபிடிக் கும் அவசியத்தையும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தையும் வலியு றுத்தி தன்னார்வ அமைப்புகள் வழங் கிய முகக்கவசங்களை பொது மக்க ளுக்கு வழங்கினர்.
கபசுர குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் பிரியா பாரா மெடிக்கல் கல் லூரி முதல்வர் தவசுமணி, சமூக ஆர்வ லர் ஜேசுதாஸ் மற்றும் பள்ளி நாட்டு நல திட்ட மாணவியர்கள் செய்திருந்த னர்.