tamilnadu

img

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

உடுமலை, அக். 4- கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தை சேர்ந்த இளநிலை மாணவி கள் கிராமப்புற தங்கம் திட்டத்தின் கீழ்  உடுமலை யில் பயிற்சி பெற்று வரு கின்றனர்.  திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் கிராமப்புற தங்கம் திட் டத்தின் கீழ் கோவை வேளாண்மை பல்கலையில் நான்காம் ஆண்டு பயிலும் இளநிலை மாணவிகளுக்கு வேளாண் பொறியாளர் யுவராஜ் தக்ஷிணாமூர்த்தி வேளாண் பொறியியல் துறையை சார்ந்த மானியம் மற்றும் திட்டங்களை விளக்கினார். சொட்டு நீர் பாசனம், கைபேசி மூலம் கட்டுப்படுத்தும் சொட்டு நீர் அமைப்பு, பண்ணை குட்டை  மற்றும் தடுப்பணை மூலம் நீர் மேலாண்மை பற்றியும், சூரிய பம்ப் மற்றும் சூரிய உலர்த்தி பற்றியும், இழுவை (டிராக்டர்) மற்றும் இழுவை யுடன் பயன்படுத்தும் கருவிகளின் மானியங்களை பற்றியும் விரிவுரைத்தார். மேலும், வேளாண் பொறியியல் துறை யைச் சார்ந்த பல்வேறு திட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். இதேபோல், காங்கேயம் மற்றும் சிவன்மலை சுற்றுவட்டார பகுதிகளில் மண் பரிசோதனைக்காக, வெவ்வேறு கிராமங்களில் மண் மாதிரிகளை சேகரித் தனர். சே௧ரித்த மண் மாதிரிகளை, நடமா டும் மண் பரிசோதனை நிலையம்(பல்லடம்) உதவியுடன் விவசாயிகளின் மண் மாதி ரிகளின் தன்மைகளான மண் நயம், சுண் ணாம்பு நிலை, உப்பின் நிலை, களர்-அமில நிலை, பேரூட்டச் சத்துக்கள் (தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து), நுண்ணூட்டச் சத்துக்கள் (இரும்பு, மாங்கனீசு, துத்த நாகம், தாமிரம்) அளவு ஆகியவற்றை மண்ணியல் வல்லுநர்கள் மூலம் சோதித்து விவசாயிகளுக்கு மண் மாதிரிக்கு ஏற்ற பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக் கள், நுண்ணுயிர் உரம் மற்றும் அங்கக உரங் கள் இட வேண்டிய அளவை மண் வள அட்டையின் மூலம் பரிந்துரை செய்தனர்.