திருப்பூர், ஜூன் 25 - திருப்பூர் காதர்பேட்டை மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திருப்பூரில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்து உள் ளது. அதன்படி பறக்கும்படை அமைக்கப் பட்டு கண்காணிப்பு பணிகளைத் தீவிரப் படுத்தி உள்ளது. அத்துடன் பொது இடங்க ளில் வேலை செய்வோர்,பயணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும், இல்லா விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வியாழ னன்று திருப்பூரில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருக்கக்கூடிய காதர்பேட்டை மார்க்கெட் டில் திருப்பூர் வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை யினருடன் சென்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பெரும்பாலான பனியன் குடோன்கள் மற்றும் கடைகளில் கடை யின் உரிமையாளர்கள், ஊழியர்கள் முகக் கவசம் அணியாமலும்,தனிமனித இடை வெளியைக் கடைப்பிடிக்காமலும் செயல் பட்டதைக் கண்டு அவர்களுக்கு அபராதம் விதித்தனர். மொத்தம் ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனையா ளர்கள், பணியாளர்களுக்கு தலா ரூ. 500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்தோடு, தனிநபர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் ரூ.100 வீதம் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அபரா தம் விதிக்கப்பட்டது. மேலும், பொது மக்கள் விதிமுறைக்குப் புறம்பாக முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெ ளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்தால் அபராதம் விதிப்பதுடன், கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.