tamilnadu

திருப்பூர் மாவட்ட கடன் திட்ட அறிக்கை வெளியீடு: ரூ.12.52 கோடி கடன் வழங்க நிர்ணயம்

திருப்பூர், ஆக. 28 - திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2020-2021-ஆம் நிதி யாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், ரூ.12.52 கோடிக்கு கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட வங்கியாளர்கள் மாதாந்திர கூட்டம் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 2020-2021-ஆம் நிதியாண் டுக்கான கடன் திட்ட அறிக்கை  வெளி யிடப்பட்டது. இந்த அறிக்கையின் படி, மாவட்டத்தின் அனைத்து வங்கிக ளும் இணைந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண்டும் என ஆட்சி யர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக் கொண்டார்.

இந்த அறிக்கையில், 2020-21-ஆம் ஆண்டிற்கு முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.12 ஆயிரத்து 522 கோடி ஆகும். இதில், வேளாண்மை துறைக்கு ரூ.3 ஆயிரத்து 349 கோடி (26.74 சதம்), சிறு வணிகத் துறைக்கு ரூ.7 ஆயிரத்து 435 கோடி (59.38 சதம்), பிற முன்னு ரிமை கடன்களுக்கான வீட்டுக்கடன், மரபு சாரா எரிசக்திக் கடன், கல்விக் கடன் மற்றும் இதர கடன்களுக்கான ரூ. ஆயிரத்து 738 கோடி (13.88 சதம்) என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கடன் திட்டத்தைவிட நடப்பாண்டு ரூ.485.90 கோடி (4.04 சதம்) கூடுதலாக இலக்கு நிர்ண யிக்கப்பட்டு உள்ளது.

அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன் வழங்குவதில் 11 யிரத்து 617 நபர்களுக்கு ரூ.ஆயிரத்து 176 கோடி கடன் ஒப்பளிப்பு வங்கி மூலம் செய்ததில் 8ஆயிரத்து 519 நபர்களுக்கு ரூ.955 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சார்பில் கோவிட்-19 மூலதன நிதியாக அவிநாசி, குண்டடம், திருப்பூர், பொங்கலூர் மற்றும் உடுமலைப் பேட்டை ஆகிய வட்டாரத்தைச் சேர்ந்த 5 உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சத்திற்கான நிதியுத வியும் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், செயல்படும் சிறந்த வங்கிகளுக்கான விருது மற்றும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், முன்னோடி வங்கி துணை பொது மேலாளர் (கனரா வங்கி) ஹரிநாராயணா, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜூ, மக ளிர் திட்டம் திட்ட இயக்குநர் கோமகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி.அலெக்சாண்டர், மாவட்ட தொழில் மைய பொது மேலா ளர் கண்ணன்,  கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் தர்மலிங்கம், வங்கியாளர் கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.