அவிநாசி, ஆக. 29- அவிநாசி அருகே தெக்கலூரில் வெள்ளியன்று சிமெண்ட் கற்களை ஏற்றி வந்த வேனின் டயர் வெடித்து கவிழ்ந்ததில், 3 கட்டடத் தொழிலா ளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை நீலம்பூரில் இருந்து வேலி அமைக்கும் சிமெண்ட் கற்களை ஏற்றிக் கொண்டு அவிநாசி அருகே பழங்கரை நோக்கிச் சென்று கொண்டி ருந்த வேனில் ஓட்டுநர் மற்றும் கட்டி டத் தொழிலாளர்கள் 10 பேர் பயணம் செய்தனர்.
அவிநாசி அருகே தெக்க லூர் புறவழிச்சாலை நாதம்பாளையம் பிரிவு அருகே வரும்போது எதிர் பாராதவிதமாக வேனின் டயர் வெடித் தால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிக எடையுள்ள சிமெண்ட் கற்கள், வேனில் பயணம் செய்த கட் டிடத் தொழிலாளர்கள் மீது விழுந்த தில் பலத்த காயமடைந்த தேனி தம் பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சை யப்பன் மகன் சுரேஷ் (20) என்பவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், வேன் ஓட்டுநரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (27), கட்டடத் தொழிலாளர்களான பவுன்ராஜ் (25), அரவிந்த் (20), அருண் குமார் (21), பாலமுருகன் (22), பாண்டி யன் (19), மணிகண்டன் (55), விவேக் (20), சதீஸ் (21) ஆகிய 9 பேர் பலத்த காயமடைந்து, அவிநாசி, திருப்பூர், கோவை அரசு, தனியார் மருத்துவம னைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் தேனி மாவட்டம், வருசநாடு பகுதியைச் சேர்ந்த பழனி மகன் சதீஷ்குமார் (20), ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(55) ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனின்றி வெள்ளியன்று மாலை உயிரிழந்தனர். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர். டயர் வெடித்து கட்டடக் கூலித் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.