திருப்பூர், ஆக. 25– பல்வேறு நெருக்கடிகளில் சிக் கித் தவிக்கும் பின்னலாடைத் தொழிலைக் காப்பாற்ற தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியா ளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதி யாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டீமா அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது: திருப்பூரை பொருத்தவரை நேரடியாக சுமார் 5 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 10 லட்சம் பேரும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் நூல்விலை உயர்வு, தொழிலாளர் பற் றாக்குறை, மூலப்பொருள் விலை உயர்வு, நேர்முக மற்றும் மறைமுக வரியினங்கள் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பின்னலாடைத் தொழில் துறையினர் சிக்கித் தவித்து வருகின்ற னர். இதனால் வெளிநாட்டு போட்டி யில் சிரமப்பட வேண்டியுள்ளது. உள்நாட்டு வர்த்தகத்தில் தேக்க நிலை உருவாகிறது. எனவே தமிழகத்தில் பின்னலாடை தொழில்துறைக்கென தனி வாரியம் அமைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனன் செய்து இந்த தொழில் துறைக் கென தனி ஆராய்ச்சிப் பணிகளை தொடங்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். தொழில் நிலையை மேம் படுத்த முடியும். டாஸ்மாக் கடை திறந்தி ருக்கும் நேரத்தை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை என குறைத்திட வேண்டும். தற்போதுள்ள மந்தநிலை மற்றும் தொழில் தேக்கநிலை காரணமாக ஏராள மான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி வருகின்றன. இந்த நிலை தடுக்கப்பட வேண்டும் என்று டீமா சங்கம் கோரியுள்ளது.