அவிநாசி, பிப். 15- அவிநாசியில் தொடர் மண் திருட்டில் ஈடுபட்டு வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலை யில், வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் காட்டி வரு வதாக தீக்கதிர் சுட்டிக்காட்டிய நிலையில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவிநாசி அருகே சேவூர், தெக்கலூர், ஆட்டையம் பாளையம் மற்றும் வேலாயுதம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றி தனியார் மற்றும் அரசு நிலங்களில் கிராவல் மண் கடத்தி வரு வதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவிநாசி வட்டாட்சியர் சாந்தி ஆய்வில் ஈடுபட்டு, அப்பகுதிக ளில் மண் கடத்த பயன்படுத்தப்பட்ட எட்டு டிப்பர் லாரிகள் மற்றும் இரண்டு பொக்லைன் இயந்திரங் கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் லாரி உரிமை யாளர்கள் மற்றும் தப்பியோடிய ஓட்டுநர்கள் மற் றும் மண் கடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்தது. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளி யானது. இந்நிலையில், தற்போது அவிநாசி காவல் நிலையத்தில் வட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப் படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.