திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகளில் வேலை செய்யும் ஆட்களின் எண்ணி கையைக் குறைப்பதுடன், சம்ப ளத்தையும் 30 சதவிகிதம் வரை வெட்டிக் குறைத்து நெருக்க டியை தொழிலாளர்களுக்கு நிர்வாகங்கள் மடைமாற்றி வருகின்றன. கொரோனா ஊரடங்கு கட் டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த மே 6 ஆம் தேதி முதல் அதிகபட்சம் 50 சதவிகிதத் தொழிலாளர்களுடன் பின்ன லாடை ஜவுளி ஆலைகளை இயக்கலாம் என நிபந்தனை களுடன் அனுமதி வழங்கப் பட்டது. இந்நிலையில், ஆயி ரம் தொழிலாளர்களுக்கு மேல் வேலை செய்த நிறுவனங்களில் இருந்து சுமார் 10 பேர் வேலை செய்யும் தொழிற்சாலைகள் வரை திறக்கப்பட்டது.
பின்ன லாடை சார்புத் தொழில்கள் முழுமையாக இயக்கத்துக்கு வராத நிலையில் இன்னும் பெரும்பாலான தொழிற்சா லைகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், ஏற்கனவே வேலை செய்து வந்த தொழி லாளர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் வேலைக்கு அழைக்கப் பட்டுள்ளனர். இதனால் மீதி 50 சதவிகிதம் பேருக்கு வேலை யின்மை தொடர்ந்து கொண் டிருக்கிறது. குமார் நகர் பகு தியில் இயங்கி வரும் முன் னணி பின்னலாடை தயாரிப்பு நிறுவனத்தின் பிரிவு தொழிற் சாலையில் 60 பேர் மட்டும் வேலைக்கு வந்தால் போதும் என்று நிர்வாகம் சொல்லி விட்டது. அங்கிருக்கும் தொழி லாளர்கள் சுழற்சி முறையில் அனைவருக்கும் வேலை தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் நிர்வாகம் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
இத னால் ஒரு பகுதி தொழிலா ளர்களுக்கு வேலை கிடைக்கும் நிலையில், மறுபகுதி தொழி லாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். கொங்கு நகர் பகுதியைச் சேர்ந்த பின்னலாடை தயாரிப் பாளர் கூறும்போது, ஏற்க னவே உறுதி செய்த ஆர்டர் களுக்குக் கூட வெளிநாட்டு வர்த்தகர்கள் விலையை மிகவும் குறைத்துக் கேட்கின்றனர். அந்த விலைக்குச் செய்ய முடி யாது என்று சொன்னால் ஆர் டர் ரத்தாகி விடும், வேறு உற் பத்தியாளர் அந்த ஆர்டரைப் பெறுவதற்கு தயாராக காத்தி ருக்கின்றனர். எனவே கட்டு படியாகாத விலையை சமா ளிப்பதற்கு தொழிலாளர்க ளுக்கு தரும் ஊதியத்தைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
கொங்கு நகர் நிறுவனத்தில் மொத்தம் 24 பேர் பவர்டேபிள் மற்றும் சிங் கர் டேபிள் டெய்லர்களாக வேலை செய்கின்றனர். வழக்க மான நாட்களில் இதில் சிலர் வேலைக்கு வராமல் போவது உண்டு. ஆனால் கொரோனா ஊரடங்கினால் இரண்டு மாதங் களாக வேலை, வருமானம் இல்லாத நிலையில் இப்போது முழுமையாக 24 பேரும் வேலைக்கு வருகின்றனர். ஆனால் ஒரு வார காலம் வேலை செய்த இவர்களுக்கு நாங்கள் கொடுத்த ஊதியம் மிகவும் குறைவு. வழக்கமான நாட்கள் என்றால் 24 பேர் ஒரு வாரம் வேலை செய்தால் ஏறத் தாழ 40 ஆயிரம் ரூபாய் சம்ப ளமாகத் தர வேண்டியிருக்கும். ஆனால் இப்போது சுமார் ரூ.20 ஆயிரம் தான் கொடுத்தோம் என்று நிறுவன உரிமையாளர் கூறினார்.
அதாவது ஏறத்தாழ 50 சதவிகிதம் ஊதியம் குறைக் கப்பட்டுள்ளது. இது தவிர ரூ.10 கோடிக்கு மேல் முதலீட்டில் செயல்படக் கூடிய நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் தொழிலாளர்கள் மட்டுமின்றி, அலுவலகப் பணியாளர்களாக இடைநிலை நிர்வாகப் பிரி வில் பணியாற்றக் கூடியவர் களுக்கும் ஊதியம் குறைக்கப் பட்டுள்ளது. 30 சதவிகிதம் ஊதியக் குறைப்பு என்பது கிட் டத்தட்ட திருப்பூர் முழுமையும் தற்போது செய்யப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர் தரப்பில் கூறுகின்றனர். ஆட்குறைப்பு செய்வதைத் தவிர்க்க நினைத்து அனைவருக்கும் வேலை தரலாம் என்று நினைக் கக்கூடிய நிறுவனங்கள், ஊதி யத்தைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
ஊதி யத்தைக் குறைக்காமல் தரலாம் என்றால் ஆட்களைக் குறைக்க வேண்டியுள்ளது என்று அவர் கள் கூறுகின்றனர். ஆக இப் போதைய நெருக்கடியின் சுமையை உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து தொழிலா ளர்கள், பணியாளர்களுக்கு மடை மாற்றும் நிகழ்வு நடை பெற்று வருகிறது. இதுகுறித்து உற்பத்தியா ளர்கள் கூறும்போது, ஒட்டு மொத்தமாக உலகச் சந்தை மற்றும் உள்நாட்டுச் சந்தை நிலவரம் தெளிவில்லாமல் இருக்கிறது. எனவே நாங்கள் உற்பத்தி செய்து ஆடைகளை அனுப்பி பணம் பெறுவது கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருப்பூர் பின்ன லாடை நிறுவனங்கள் கடந்த நிதியாண்டு முழுவதுமே கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்தன. அரசு சிறப்புத் திட்டத் திலும் எங்களுக்கு எந்த சலு கையும் கிடைக்கவில்லை. வங் கிகள் உடனடியாக கடன் வழங் கலாம் என மத்திய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் கூறி னாலும், வங்கி மேலாளர்கள் கடன் தரத் தயங்குகின்றனர்.
ஏற்கனவே சொத்துப் பிணை கொடுத்து கடன் பெற்றிருக் கும் பெரிய நிறுவனங்களுக் குத்தான் கூடுதலாக 25 சதவி கிதம் கடன் தருகிறார்கள். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்க ளுக்கு இந்தக் கடனும் கிடைப் பதில்லை. எனவே கையில் பணமும் இல்லாமல், வங்கிகள் கடனும் தராமல், அரசும் உதவி செய்யாமல் கைவிட்ட நிலை யில், எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்தாலும் பரவாயில்லை. தொழிற்சா லைகளை இயக்கலாம் என்பது தான், என்று தங்கள் நிலையைப் பற்றி விளக்குகின்றனர். இப்போதைய நிலை சீர டையும்போது மீண்டும் பழைய ஊதியத்தை வழங்குவதாக தட்டான்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர், தனது ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பணியாளர்களை நேரில் அழைத்துப் பேசி உறுதியளித் ததாகக் கூறினார். நெருக்கடியின் கடைசி சுமையை சுமக்கக்கூடியவர் களாக தொழிலாளர்களும், நிர்வாகப் பிரிவு அலுவலர்க ளும் இருக்கிறார்கள்.
இது பற்றி தொழிலாளர்களிடம் பேசியபோது, இப்போதைய நெருக்கடியான நிலையில் வேலை தர வேண்டும் என்பது தான் எங்களுக்கு முக்கியமாக உள்ளது. கூலியைக் குறைப்பது எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இதை ஏற் காவிட்டால் வேலை தர முடி யாது என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். எனவே வேறு வழியில்லாமல் போகிறது என்று வேதனைப்படுகின்ற னர். இது பற்றி சிஐடியு பனி யன் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஜி. சம்பத் கூறுகையில், கொரோனா ஊர டங்கு இருந்தபோதே, வேலை தராவிட்டாலும் தொழிலாளர் களுக்கு ஊதியம் தர வேண்டும் என்று பிரதமர் மோடியும், முதல் வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறியிருந்தனர். அப்போதும் கூட பல முதலாளிகள் தொழி லாளர்களுக்கு சம்பளம் தர வில்லை. இதனால் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர் குடும் பங்கள் வீட்டு வாடகை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய செலவு மற்றும் மருத்துவச் செலவுகள் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
ஏறத்தாழ இரண்டு மாதங்களாக வேலை இல்லாத நிலையில் பலர் கடன் வாங்கி சமாளித்து வந்துள்ள னர். இப்போது வேலை கிடைத்தாலும் கூலியைக் குறைப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. பலரும் வேலைக்குப் போய் சம்பளம் வாங்கி கடன்களைக் கட்ட லாம் என்று தான் காத்திருந்த தனர். இப்போது கூலியைக் குறைத்தால் தொழிலாளர்கள் நடைமுறை செலவை சமாளிப் பதற்கே பற்றாக்குறை ஏற்ப டும். மேலும் கடனாளிகளா கத்தான் மாறிப் போவார்கள். பெரிய அளவுக்கு செயல் படும் நிறுவனங்கள் தொழிலா ளர்களின் கூலியைக் குறைப் பதை ஏற்க முடியாது.
அவர்க ளுக்கு ஏற்கனவே வழங்கி வந்த அதே அளவு சம்பளம் தருவதை உத்தரவாதப்படுத்த வேண் டும். குறு, சிறு, நடுத்தர நிறு வனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருவதால் கூலியைக் குறைப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் மத்திய அரசு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண் டும் என்பது தான் சிஐடியு தொழிற்சங்கத்தின் நிலை. எனவே அந்த நிறுவனங்கள் தாங்கள் சந்திக்கும் நெருக்கடி யின் சுமையை தொழிலாளர்கள் மீது மடை மாற்றுவதற்கு மாறாக, மத்திய, மாநில அரசு கள் உரிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று வலிமையாக ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். அதற்கு தொழிற்சங் கங்களும் பக்க பலமாக இருக்கும்.
விலைவாசி தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான ஊதி யத்தை வழங்க வேண்டும் என் பதுதான் எங்கள் நிலை, என்று ஜி. சம்பத் கூறினார். ஆக, தொழில் உற்பத்தியின் தொழி லாளர், முதலாளி என இரு மருங் கிலும் நடைபெறும் தற்போ தைய பனிப்போரினை முடிவுக் குக் கொண்டு வர அரசு என்ன செய்யப்போகிறது என்பதே பரவலான எதிர்பார்ப்பாக தற் போது உள்ளது. - வே. தூயவன்