உடுமலை, செப்.16- விவசாயக்கூலித் தொழிலாளர்கள் குடி யிருக்கும் வீடுகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி விவசாயித் தொழிலாளர் கள் சங்கத்தினர் உடுமலை வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றி யம் பொன்னேரி ஊராட்சி அய்யம்பாளை யம்புதூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயக்கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீடுக ளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காங்கேயம் ஆதிதிராவிட நலத்துறை வட் டாட்சியர் சைலஜா அவர்களிடம் மனு அளித் தனர்.
அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மேற்கண்ட கோரிக்கை மீது உரிய விசாரணை நடத்தி விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இடம் வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுப் பதாக வட்டாட்சியர் உறுதியளித்தார். இதன்பின்னர் அனைவரும் கலைந்து சென் றனர். இப்பேச்சுவார்த்தையில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆ.பஞ்சலிங்கம், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.