அவிநாசி, செப். 28- அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பொது மக்கள் தீப்பந்தம் ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். அவிநாசி ஒன்றியத்திற்குட் பட்ட பழங்கரை, சின்னேரிபாளை யம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட ரங்காநகர், வைஷ்ணவி கார்டன், அய்யப்பா நகர், ருக்மா கார்டன், சாலையூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் தார்ச் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக் கொடுத்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், ஆவேச மடைந்த மக்கள் சனியன்று மாலை மின்கம்பத்தில் தீப்பந்தம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்படாத நிலையில், பொதுமக்கள், தீப்பந்தத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது, கடந்த ஆக ஸ்ட் 8ஆம் தேதி இரவு, எங்கள் பகுதி யைச் சேர்ந்த இரு பெண்கள் இரு சக்கர வாகனத்தில் சேறும் சகதி யுமாக உள்ள சாலையில் வரும் போது, தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அப்பொழுதே கொட் டும் மழையையும், இரவு என்று பாராமல் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அப் போது வந்த ஊராட்சி ஒன்றிய நிர் வாகத்தினர், உடனடியாக பழுத டைந்த சாலை தற்காலிகமாக சீரமைக்கப்படும் என்றும், விரை வில் திட்ட அறிக்கை அனுப்பியுள் ளபடி, நபார்டு திட்டத்தின் மூலம் தார் சாலை அமைத்துக் கொடுக் கப்படும் எனத் தெரிவித்தனர். மேலும் தெருவிளக்குகள் உடனடி யாக சீரமைக்கப்படும் எனவும் தெரி வித்தனர். இதையடுத்து நம்பிக்கை யுடன், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றோம். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். இதையடுத்து, உடனடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத் திற்குக் கொண்டு சென்று திங்கள் கிழமைக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.