திருப்பூர், பிப். 18– அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் நடைமுறை யில் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பளத்தில் இருந்து 100 சத விகிதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தேசிய பனியன் ஜின்னிங் பொதுத் தொழிலாளர் சங்கம் (ஐஎன்டி யுசி) கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஞாயிறன்று பார்க் ரோடு ஐஎன்டியுசி அலுவலகத்தில் சங்கத் தலைவர் அ.பெரு மாள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பீஸ்ரேட் உட்பட அனைத்து பனியன் தொழிலாளர்களுக் கும் நடைமுறைச் சம்பளத்தில் இருந்து நூறு சதவிகிதம் உயர்த்தி வழங்க வேண்டும், சென்னை நகர விலைவாசிக் குறியீட்டெண் 10867க்கு மாதம் ரூ.1500 வீதம் பஞ்சப்படி, அதற்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் 25 பைசா வீதம் உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலாளர் கந்துவட்டிக் கொடுமையில் இருந்து விடுபட 250க்கு மேற்பட்ட தொழி லாளர் வேலை செய்யும் தொழிற்சாலைகளில் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் உருவாக்க வேண்டும், ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடு தொழிலாளர்களுக்குக் கிடைக்க, ஆலை நிர்வாகம் பிரீமியம் செலுத்த வேண்டும், பணிக்காலத் தில் மரணமடையும் தொழிலாளர் குடும்ப நல நிதியாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும், காண்ட்ராக்ட் முறையை அகற்ற வேண்டும். இஎஸ்ஐ திட்டம் அமலாக பகுதிகளில் பெண் தொழிலா ளர்களுக்கு 9 மாத சம்பளத்துடன் பிரசவ விடுப்பு வழங்க வேண்டும். பயணப்படி ரூ.50 வீதம் தினமும் வழங்க வேண் டும், நூறு பேருக்கு மேல் வேலை செய்யும் நிறுவனத்தில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசிக்க குடியிருப்புகள் ஏற் படுத்தித் தர வேண்டும், ஓவர்டைம் பேட்டா 100 சதவிகி தம் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை ஐஎன்டியுசி விடுத்துள்ளது. முன்னதாக இக்கூட்டத் தில் பொதுச் செயலாளர் பி.கே.என்.தண்டபாணி, செயலா ளர்கள் ஏ.சிவசாமி, வி.ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் கோபால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.