அவிநாசி, ஆக. 6 - அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதனன்று வீசிய பலத்தக் காற்று மற்றும் தொடர் மழையால் பல் வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள், வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. திருப்பூர் மாவட்டம், அவிநாசி சுற்றுவட்டாரப் பகு திகளில் புதனன்று அதிகாலை முதலே மழையுடன் கூடிய பலத்த காற்று வீசத் துவங்கியது. இதில், அவி நாசி மங்கலம் சாலை, சேவூர் சாலை என பல இடங்க ளில் மரங்கள், மின்கம்பங்கள், வாழைகள் சேதமடைந் தன.
இதனால் அப்பகுதிகளில் பல மணிநேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, சேத மடைந்த பகுதிகளை ஆய்வு செய்த பேரூராட்சி நிர்வா கித்தனர் அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வாழை மரங்கள் சேதம் குறித்து வருவாய்த் துறையினர், வேளாண்மைத் துறையினர் கணக்கெ டுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.