திருப்பூர், செப். 3 – பொதுமக்கள் அதிகம் கூடும் வழி பாட்டுத் தலங்கள் மற்றும் கடைகளில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை கள் மேற்கொள்வது தொடர்பாக காவல் துறை சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் பொதுமுடக்க நிபந்தனை கள் தளர்த்தப்பட்டு வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மக்கள் வழி பாட்டுத் தலங்கள், வணிக வளாகங்களுக்கு வருவது இயல்பு நிலையில் உள்ளது. இதனி டையே கொரோனா வைரஸ் அதிகரிக்கா மல் இருக்க, மக்கள் அதிகம் கூடும் இடங் களில் தனிமனித இடைவெளி பின்பற்று வது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் திருப் பூர் குமரன் ரோட்டில் உள்ள தனியார் அரங் கில் நடைபெற்றது.
இதில் ஆலயங்கள் மசூதி கள் மற்றும் கோவில்களில் இருந்து நிர்வாகி களும், அதேபோல் ஆட்டோ, டாக்ஸி ஓட்டு னர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அதேபோல் கடை மற்றும் வழி பாட்டுத் தலங்களில் உள்ளே நுழைவதற்கு முன் கிருமிநாசினி கொண்டு கையை சுத்தம் செய்வதோடு, உடல் வெப்பத்தைப் பரிசோ தித்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண் டும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு கட் டம் போடுவதோடு, அந்தக் கட்டத்தில் நின்று பொருட்களை வாங்கவும், வழிபாடு செய்யவும் வேண்டும் என்றும் உத்தரவி டப்பட்டுள்ளது. அதேபோல் தங்கும் விடுதிக ளில் ஒரு அறையில் ஒரு நபர் மட்டுமே அனு மதிக்க வேண்டும் என்றும் காவல் துறையி னர் அறிவுறுத்தினர்.