tamilnadu

img

பிளாஸ்டிக்கை பயன்படுத்தியதற்காக அபராதம் விதிப்பு அதிகாரிகளை சிறைபிடித்த பனியன் கம்பெனி உரிமையாளர்கள்

அவிநாசி ,ஜூலை 22- அவிநாசி அடுத்த போத்தம் பாளையத்தில் திங்களன்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த பனியன் கம்பெனி உரிமையாளர்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவினாசி ஒன்றியம், பாப் பாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட போதபாளையத்தில்  சிறு பனியன் கம்பெனிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 20க்கும் மேற் பட்டவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பகுதியிலுள்ள பனியன் கம்பெனி நிறுவனங்கள், டீ கடை , மளிகைக் கடை ஆகிய பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹரிகரன் தலை மையிலான அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பெருட் கள் பயன்படுத்தப்படுகிறா என ஆய்வு மேற்கொண்டனர். அப் போது, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்த னர். இந்த நடவடிக்கையை கண் டித்து பனியன் கம்பெனி உரிமை யாளர்கள் ஆய்விற்கு வந்த அதி காரிகளை சிறைபிடித்தனர்.  அப்போது அவர்கள் கூறு கையில், இங்குள்ள பனியன் நிறு வனங்கள் அனைத்தும்  ஜாப் ஒர்க் அடிப்படையில்  செயல்பட்டு வரு கிறது. எங்களுக்கு வேலை  ஆர்டர் கொடுக்கும் பனியன் கம் பெனிகளில் இருந்து பேக்கிங் செய்வதற்காக பிளாஸ்டிக் கவர் கள் தருகின்றார்கள்.  தற்போது, இதன் மீது ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்  அபராதம் விதித்தி ருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.  பிளாஸ்டிக்கை வழங்கும் பெரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஜாப் ஆர்டர் பெற்று பணியாற்றும் எங்களுக்கு அபராதம் விதிப்பது சரியல்ல. ஆகவே, விதிக்கப்பட்ட அபாராத்தை திரும் பப் பெறுவதுடன், பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் களை கொடுக்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தனர்.  இதுகுறித்து ஆய்வு மேற் கொண்ட அதிகாரிகள் கூறுகை யில், மாவட்ட ஆட்சியர் உத்தர வின் பேரில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆய்வு மேற்கொண்டு வருகி றோம். இதனடிப்படையில் பனி யன் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு தற்போது ரூ.3,500  அபராதம் விதித்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தோம். மேலும், இந்நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர் தரும் எக்ஸ்போர்ட்  பனியன் கம்பெனி நிறுவனங்க ளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். அடுத்த முறை யில் வேறு வகையில் பேக்கிங்  செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி யுள்ளதாக தெரிவித்தனர்.