tamilnadu

img

ஆக.19ல் கொரோனா நிவாரண நிதி கோரி போராட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு

திருப்பூர், ஆக.11- கட்டுமானம் அமைப்புசாரா நல வாரியத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்காததைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுக்கும் போராட்டமும், ஆகஸ்ட் 31 ல் நல வாரிய அலுவலகம் முற் றுகை போராட்டமும் நடத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்ட கட்டுமானம், அமைப்பு சாரா சங்கங்களின் கூட்டுக் கூட்டம் டி.குமார் தலைமையில் ஏஐடி யுசி அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஏஐடியுசி நிர்வாகிகள் சேகர், ஜெகநாதன், ஐஎன்டியுசி சிவசாமி, எல்பிஎப் ரங்கசாமி, மயில்சாமி,  எச்எம்எஸ் முத்து சாமி, எம்எல்எப் பாண்டியராஜன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

இதில், திருப்பூர் மாவட்ட நலவாரியத் தில் தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி ரூ.2000 உடனே வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள பென்சனை உடனே வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு உடனே அட்டை வழங்குக, பதிவை தள்ளுபடி செய் வதை நிறுத்துக, மாவட்ட நிர்வாக கண்கா ணிப்புக் குழுக் கூட்டத்தை உடனே நடத்த வேண்டும்,    மாநில நலவாரிய முடிவுகளை மாவட்ட தொழிற்சங்கங்களுடன் கலந்து ரையாடல் கூட்டம் நடத்த ஆன்லைன் பதிவை முறைபடுத்த வேண்டும் என தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

மேலும், உதவி ஆணையர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆகஸ்ட் 19 இல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டமும், ஆகஸ்ட் 31- ல் நல வாரிய அலுவலகம் முற்றுகை போராட் டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.