அவிநாசி, செப். 23- அவிநாசி அருகே அரசு பள்ளியில் சமூக விரோதிகளால் கழிப்பறைகள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. அவினாசி அருகே திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட இராக்கி பாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள் ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இங்கு பள்ளிக்குழந்தைகள் பயன்ப டுத்தி வந்த கழிவறைகள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட் டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் எஸ்.வெங் கடாசலம் கூறுகையில், இராக்கிபா ளையம் அரசுப்பள்ளி தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இப்பள்ளியில் உரிய காவலாளி இல்லாத காரண மாக ஞாயிற்றுக்கிழமை இரவு சமூக விரோதிகள் கழிப்பறைகளை சேதம் செய்துள்ளனர். இதுதொடர்பாக திரு முருகன்பூண்டி காவல் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. உடனடியாக பள்ளியின் நலன் கருதிஇரவு காவலரை நிய மனம் செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.